TN G.O KALVISOLAI

Saturday, August 26, 2017

பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ..எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார். எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில்கள் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளரான பழனிசாமி, நகர் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனரான டாக்டர் கே.கோபால் பால்வளம் மற்றும் மீனவளத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அசோக் டேங்ரே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திர ரத்னு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். மண்ணியல் மற்றும் சுரங்க துறை கமிஷனர் ஆர்.பழனிசாமி, தொழில் கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் கலெக்டருமான ஆர்.ரோகினி, சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனராக மாற்றப்பட்டார். பேரிடர் மேலாண்மை இயக்குனரான ஜி.லதா, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைசெயலாளராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொழில்கள் மற்றும் வர்த்தக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். காதி கதர் கிராம வாரிய தலைமை செயல் அதிகாரி சுடலைகண்ணன், எல்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தொழில்கள் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.அண்ணாமலை, பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். DOWNLOAD

Friday, August 25, 2017

G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை

G.O (1D) No.500  DT: August 22, 2017  - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது | மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் நீலோபர் கபீல் அவர்களால் 13.07.2017 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 22.08.2017-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.08.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார். DOWNLOAD

Popular Posts