TN G.O KALVISOLAI

Saturday, December 9, 2017

MARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிசம்பர் 11 முதல் 16 வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (சேவை மையங்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது). இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அபராத கட்டணத்துடன் டிசம்பர் 18 முதல் 20 வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். 2016 ஜூன், ஜூலை பருவம் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் எஸ்எஸ்எல்சி முழுமையாக தேர்ச்சிப்பெற்று 2 ஆண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத முடியும். இதுவே, அவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. DOWNLOAD

No comments:

Popular Posts