
அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
| DOWNLOAD
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||