Hot Posts

6/random/ticker-posts

Ad Code

GO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.  DOWNLOAD

Post a Comment

0 Comments

Ad Code