பொதுவான விடுப்புகள்
- தற்செயல் விடுப்பு (Casual Leave - CL): ஒரு நாட்காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள்.
- வரையறுக்கப்பட்ட விடுப்பு (Restricted Holiday - RH): ஒரு நாட்காட்டி ஆண்டிற்கு 3 நாட்கள்.
- ஈட்டிய விடுப்பு (Earned Leave - EL):
- ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு 17 நாட்கள்.
- மொத்தம் கணக்கில் சேமிக்கக்கூடிய அதிகபட்ச நாட்கள்: 240 நாட்கள்.
- ஈடு செய்யும் விடுப்பு: ஒரு வருடத்திற்கு 10 நாட்கள்.
- ஒப்படைப்பு விடுப்பு (Surrender Leave):
- வருடத்திற்கு ஒருமுறை 15 நாட்கள் அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 30 நாட்கள் ஒப்படைக்கலாம்.
மருத்துவ மற்றும் தனிப்பட்ட விடுப்புகள்
1. மருத்துவ விடுப்பு (Medical Leave - ML): பணிக்காலத்தின் அடிப்படையில் மருத்துவச் சான்றிதழின் பேரில் வழங்கப்படும் விடுப்பு நாட்கள்:
- 2 முதல் 5 வருடம் பணி: 90 நாட்கள்
- 5 முதல் 10 வருடம் பணி: 180 நாட்கள்
- 10 முதல் 15 வருடம் பணி: 270 நாட்கள்
- 15 முதல் 20 வருடம் பணி: 360 நாட்கள்
- 20 வருடத்திற்கு மேல்: 540 நாட்கள்
2. சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு (UEL - Unearned Leave on Private Affairs): (தொடர்ச்சியாக 90 நாட்கள் மட்டுமே அனுமதி)
- 0 முதல் 10 வருடம் பணி: 90 நாட்கள்
- 10 வருடத்திற்கு மேல்: 180 நாட்கள்
3. புற்று நோய் சிகிச்சைக்கான விடுப்பு:
- புற்று நோய்க்காக மருத்துவ விடுப்பு கோரும் போது தொடர்ச்சியாக விடுப்பு அனுமதி: 540 நாட்கள்.
- புற்று நோய் சிகிச்சை (ஒவ்வொரு ஹீமோ மற்றும் ரேடியோதெரபி சிகிச்சையின் போது): 10 நாட்கள்.
மகப்பேறு மற்றும் குழந்தை நல விடுப்புகள்
- மகப்பேறு விடுப்பு (Maternity Leave): முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் 365 நாட்கள் (ஒரு வருடம்).
- தத்தெடுக்கும் விடுப்பு: 365 நாட்கள்.
- கருச்சிதைவு விடுப்பு: 42 நாட்கள்.
சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave)
குடும்பநல அறுவை சிகிச்சைக்காக:
- அரசு ஊழியரின் மனைவி அறுவை சிகிச்சை செய்தால் (பிரசவம் தவிர்த்து): 7 நாட்கள்.
- ஆண் அரசு ஊழியர் அறுவை சிகிச்சை செய்தால்: 8 நாட்கள்.
- பெண் அரசு ஊழியர் அறுவை சிகிச்சை செய்தால் (பிரசவம் தவிர்த்து): 20 நாட்கள்.
தொற்று நோய்களுக்கான விடுப்பு:
- சின்னம்மை (Chickenpox): 7 நாட்கள்.
- தட்டம்மை (Measles): 7 நாட்கள்.
- பன்றிக்காய்ச்சல் (Swine Flu): 7 முதல் 10 நாட்கள்.
- பிளேக் (Plague): 10 நாட்கள்.
- ரேபிஸ் (Rabies): 10 நாட்கள்.
பிற:
- தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க: வருடத்திற்கு 30 நாட்கள்.
பணியேற்பிடைக்காலம் (Joining Time)
- பணியேற்பிடைக்காலம்: 7 நாட்கள்.
- அனுபவிக்காத பணியேற்பிடைக்காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்தல்: 5 நாட்கள்.


0 Comments