TN G.O KALVISOLAI

Friday, December 16, 2016

G.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

FINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் .பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு சம் பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதன்மூலம் 18 லட்சம் பேர் பயனடைவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,833 கோடியே 33 லட்சம் கூடுதலாக செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Popular Posts