TN G.O KALVISOLAI

Saturday, March 25, 2017

G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு


வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதுமறையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன" என்றார்.

DOWNLOAD G.O

No comments:

Popular Posts