TN G.O KALVISOLAI

Wednesday, October 23, 2019

G.O Ms. No. 516 | தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு

G.O Ms. No. 516 DATE : 21.10.2019 | Orders - Issued | தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு | | DOWNLOAD

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் காலத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின் றன. அதன்படி பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த தேர்வு மதிப்பெண்கள் 1,200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்பட்டது.

அதாவது ஒரு பாடத்துக்கான தேர்வு மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டது. அதற்கேற்ப தேர்வு நேரமும் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக மாற்றப்பட்டது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ் உட்பட மொழித்தாள் ஒரே தாளாக மாற்றப்பட்டது. இதற்கிடையே 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் கூடுதல் பாடங்களுடன் சற்று கடினமாக இருப்பதாக கருத்து கள் எழுந்துள்ளன. மேலும், தற் போதைய பாடப் புத்தகங்களின்படி தேர்வு எழுத 2.30 மணி நேரம் போதுமானதாக இல்லை. எனவே, தேர்வு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிரமங்கள் இருப்பதால் தேர்வு எழுதும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மொழிப்பாடத் தேர்வு கள் ஒரே தாளாக மாற்றப்பட் டுள்ளதால் தற்போதுள்ள 2.30 மணி நேரம் மாணவர்களுக்கு தேர் வெழுத போதுமானதாக இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து அனைவரின் கோரிக்கையை ஏற்று, முதல்வரின் ஒப்புதல் பெற்று தேர்வு எழுதும் காலம் 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் கேள்வி களை நன்கு புரிந்து பதட்டமின்றி தேர்வெழுத முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Download

G.O NO : 762 - 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு: 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள அனைத்து அலு வலகங்களும் அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட வேண் டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை களுடன், 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக கொள்ளப் படும். அடுத்தாண்டில், குடியரசு தினம், மொகரம், ஆயுதபூஜை ஆகிய முக்கிய தினங்கள் ஞாயிற் றுக்கிழமைகளிலும் சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி புதன்கிழமை என்பதால், அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. புனிதவெள்ளி, மேதினம், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையும். மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், விஜயதசமி ஆகியவை திங்கள்கிழமைகளில் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட் கள் விடுமுறை அமைந்துள்ளது.

Popular Posts