TN G.O KALVISOLAI

Saturday, December 31, 2016

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு | பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் (பொறுப்பு) ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநில அரசு பணியாளர்கள் ஒரு ஆண்டில் பண்டிகைகள் அல்லது நிகழ்வுகள் என்ற வகையில் 3 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை (ஆர்.எச்.) பெற்றுக்கொள்ளலாம். பகவான் வைகுண்டசாமியின் பிறந்த தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில் சேர்க்கப்பட்டது. இறந்துபோன உறவினர்களை நினைக்கக்கூடிய நிகழ்ச்சிகளான கல்லறை திருநாள் என்ற கிறிஸ்தவ மத நிகழ்வையும், ஷபே பாரத் என்ற இஸ்லாமியர்களின் முழுநிலவு நிகழ்ச்சியையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள் பட்டியலில் சேர்க்கும்படி கோரிக்கை விடப்பட்டது. அதன்படி அந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல இந்துக்களும் மகாளாய அமாவாசை தினத்தையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Popular Posts